பொதுத்தேர்தல் 2020

Images
  • wp kenneth (1)
    (படம்: Facebook/The Reform Party)

'எதிர்க்கட்சிகள் திறம்படச் செயல்பட முடியும் என்பதைப் பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளது': கென்னத் ஜெயரத்னம்

சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் (Kenneth Jeyaratnam), எதிர்க்கட்சிகள் திறம்படச் செயல்பட முடியும் என்பதை நடந்து முடிந்த பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

சீர்திருத்தக் கட்சி இம்முறை ஒரு குழுத்தொகுதியில் மட்டுமே களம் கண்டது.

முன்னர் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்திருந்த கட்சி, மும்முனைப் போட்டியைத் தவிர்க்க அங்கிருந்து விலகிக்கொண்டது.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் பிரதமர் லீ வழிநடத்திய மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்துப் போட்டியிட்ட சீர்திருத்தக் கட்சி, 28.09 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

டெக் கீ (Teck Ghee) உணவங்காடி நிலையம் மற்றும் ஈரச் சந்தைக்குச் சென்ற திரு. கென்னத், கட்சியின் எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Top