பொதுத்தேர்தல் 2020

Images
  • pm lee pm yssain
    படம்: Muhyiddin Yassin's Facebook page/Jeremy Long

பிரதமர் லீயின் தேர்தல் வெற்றிக்கு, மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் வாழ்த்து


சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் லீ சியென் லூங்கிற்கு, மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை, அதனைத் தெரிவித்தது.

இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக்கொண்டதாக அறிக்கை குறிப்பிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான, ஆக்ககரமான உறவு குறித்து அவர்கள் உரையாடினர்.

எல்லை தாண்டிய இணைப்புத் திட்டங்கள், இருதரப்பு மக்களின் நடமாட்டம்-ஆகிய அம்சங்களில் காணப்பட்டுவரும் வலுவான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

COVID-19 நோய்ப்பரவலால் ஏற்பட்டுள்ள பொதுவான சவால்களைச் சமாளிக்க, இருநாட்டு அரசாங்கங்களும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் அவர்கள் இணக்கம் கண்டனர்.

பிரதமர் லீயுடன் பேசியதை திரு. முஹிதீன் தமது Facebook பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.  

Top