பொதுத்தேர்தல் 2020

Images
  • polling station
    படம்: Hanidah Amin

பொதுத்தேர்தல் 2020: மாது ஒருவர் வாக்களிக்க முடியாமல் போனதற்குத் தேர்தல்துறை ஆழ்ந்த வருத்தம்

சிங்கப்பூரின் இந்த ஆண்டுப் பொதுத்தேர்தலில்,மாது ஒருவர் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தேர்தல்துறை தெரிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் இருவருக்கிடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாதது அதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

36 வயது திருவாட்டி லம் வாக்களிக்கச் சென்றபோது அவர் ஏற்கனவே வாக்களித்துவிட்டதாகத் தேர்தல் அதிகாரி கூறினார்.

ஆனால் அதிகாரி தவறுதலாக மின்பதிவுக் கட்டமைப்பின் மற்றொரு பிரிவின் தகவல்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

திருவாட்டி லாம் ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதியின் வாக்காளர்.

அவருக்கு வாக்களிப்புச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் தாம் வாக்களிக்க இயலாதது குறித்துக் காவல்துறையிடம் அவர் புகாரளித்தார்.

மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் திருவாட்டி லம் வாக்களிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தேர்தல்துறை தெரிவித்தது.

வாக்களிப்பு தினத்தன்று ஏற்பட்ட மனிதத் தவற்றினால் அவ்வாறு நேர்ந்ததாகக் குறிப்பிட்ட அது அதன் தொடர்பில் தேர்தல்துறை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது. 

Top