பொதுத்தேர்தல் 2020

Images
  • ge 2020

எதிர்த்தரப்பு கூடுதல் வாக்குகளைப் பெற்றது, வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தாண்டி மற்ற அம்சங்களையும் மக்கள் கவனிப்பதைக் காட்டுகிறது: ஆய்வாளர்கள்

பொதுத்தேர்தல் 2020-இல் எதிர்க்கட்சிகள் கூடுதல் வாக்குகளைப் பெற்றது,வாக்காளர்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தாண்டி மற்ற அம்சங்களையும் கவனிப்பதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

மக்கள் செயல் கட்சி இம்முறை 61.24 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது அது சுமார் 9 விழுக்காடு குறைவு.

பாட்டாளிக் கட்சி இரண்டாவது குழுத்தொகுதியைக் கைப்பற்றியது.

இரண்டு குழுத்தொகுதிகள் எதிர்த்தரப்பு வசம் சென்றிருப்பது இது முதல்முறை.

புதிய செங்காங் குழுத்தொகுதியை வென்றதோடு அல்ஜூனிட் குழுத்தொகுதியையும் ஹவ்காங் தனித்தொகுதியையும் பாட்டாளிக் கட்சி தக்கவைத்துகொண்டது.

மக்கள் செயல் கட்சி வழிநடத்தும் அரசாங்கத்தின் செயல்திறன் குறித்து வாக்காளர்களிடையே ஓரளவு மகிழ்ச்சியின்மை நிலவுவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர் இயூஜின் டான் தெரிவித்தார்.

பொருளியல் கவலைகளைத் தாண்டி மற்ற அம்சங்களையும் வாக்காளர்கள் கவனிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் அடையாளம், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவை குறித்து வாக்காளர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.

என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பேராசிரியரான திரு. டான்.

வாக்காளர்கள் பொதுவாக வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கவனித்தாலும் இளம் வாக்காளர்களிடையே அந்தப் போக்கு காணப்படுவதில்லை என்று மற்றோர் அரசியல் ஆய்வாளர் திரு. லியோனார்ட் லிம் தெரிவித்தார்.

அவர் Vriens & Partners என்னும் அரசாங்க விவகாரங்கள், பொதுக் கொள்கை ஆலோசனை நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தில் மாற்றுக்குரல்கள் ஒலிக்க வேண்டும், ஆளுங்கட்சியைக் கண்காணிக்க எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் போன்ற அம்சங்களை இளம் வாக்காளர்கள் விரும்புகின்றனர்.

மக்கள் செயல் கட்சி ஆட்சியில் இருப்பதை வாக்காளர்கள் விரும்புகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை 

என்று திரு. லிம் கூறினார்.  

Top