பொதுத்தேர்தல் 2020

Images
  • psp
    (படம்: Facebook/Progress Singapore Party)

தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி கூறிய எதிர்க்கட்சிகள்

பொதுத்தேர்தல் 2020 முடிவடைந்துவிட்டது.

வெற்றியோ தோல்வியோ, தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற பல கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இன்று உலா வந்தன.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் சீ சூன் ஜுவான் (Chee Soon Juan) தமது மனைவியுடன் புக்கிட் பாத்தோக் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி கூறினார்.

"முடிவுகள் வலிக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. அது வலிக்கின்றது. ஆனால், நாம் மீண்டும் முயற்சி செய்வோம், முன்னே செல்வோம்",

என்று தமது Facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


சீர்திருத்தக் கட்சி
சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த திரு. சார்ல்ஸ் இயோ, திரு. கென்னத் ஜெயரத்னம் இருவரும் தெக் கீ (Teck Ghee) சந்தையில் மக்களைச் சந்தித்தனர்.

பல வாக்காளர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கட்சியின் Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியிட்ட வேட்பாளர்கள் அங் மோ கியோவின் பல இடங்களில் இன்று காலை மக்களைச் சந்தித்தனர்.

பாட்டாளிக் கட்சி

பாட்டாளிக் கட்சியின் திரு. பிரித்தம் சிங் அல்ஜுனிட், யூனோஸ் மக்களைச் சந்தித்து நன்றி கூறியதாகத் தமது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பின்னர், பாட்டாளிக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தார்.

அவர் 1959ஆம் ஆண்டு பாட்டாளிக் கட்சியில் சேர்ந்ததாகத் திரு. சிங் கூறினார். அப்போது அவருக்கு வயது 20.

அவர் தம்மைக் கடுமையாக உழைக்கவும் மக்களுக்கு நேர்மையாகச் சேவையாற்றவும் நினைவுறுத்தியதாகத் திரு. சிங் தெரிவித்தார்.


சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் டாக்டர் டான் செங் போக் தமது வெஸ்ட் கோஸ்ட் வேட்பாளர்களுடன் மக்களைச் சந்தித்து நன்றி கூறினார்.


 

Top