பொதுத்தேர்தல் 2020

Images
  • RP
    (படம்: The Reform Party/Facebook)

பொதுத்தேர்தலில் கூடுதல் வாக்குவிகிதத்தைப் பெற்ற எதிர்க்கட்சிகள்

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி, சீர்திருத்தக் கட்சி ஆகியவை இந்தப் பொதுத்தேர்தலில் கூடுதல் வாக்குவிகிதத்தைப் பெற்றன.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் சீர்திருத்தக் கட்சி 28 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

2015இல் அது 22 விழுக்காடாக இருந்தது.

நேற்றைய தேர்தல் முடிவுகளைத் தாங்கள் மதிப்பதாகவும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் கூறினார்.

இந்தப் பொதுத்தேர்தலில் தமது கட்சி கணிசமான ஆதரவைப் பெற்றிருப்பதாகவும், அடுத்த தேர்தலில் அதை அதிகரிக்க முயல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

185,000 வாக்காளர்களைக் கொண்ட அங் மோ கியோ தொகுதியில், பிரதமரை எதிர்த்துத் தாங்கள் போட்டியிட்டதைத் திரு. ஜெயரத்னம் அவர் சுட்டினார்.
 

Top