Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இறுதி நாளாக நடைபெற்ற தொகுதி அரசியல் ஒளிபரப்புகள்...எதிர்க்கட்சிகள் என்னென்ன சொல்கின்றன?

தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் இன்று இறுதி நாளாக நடைபெற்றன. அதில் எதிர்க்கட்சிகள் கூறியனவற்றின் ஒரு தொகுப்பு.

வாசிப்புநேரம் -
இறுதி நாளாக நடைபெற்ற தொகுதி அரசியல் ஒளிபரப்புகள்...எதிர்க்கட்சிகள் என்னென்ன சொல்கின்றன?

(படம்: CNA)

தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் இன்று இறுதி நாளாக நடைபெற்றன. அதில் எதிர்க்கட்சிகள் கூறியனவற்றின் ஒரு தொகுப்பு.

தெம்பனிஸ்

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

  • தொகுதிக்காக 14 திட்டங்களை முன்வைத்தார் திரு. ரெனோ ஃபோங். உடற்குறை உள்ளவர்கள், மூத்தோருக்கு உதவும் வகையில், தடையற்ற வசதிகளை அமைக்கவிருப்பதாக அவர் கூறினார்.
  • வீடுகளிலும் பொது இடங்களிலும் கைப்பிடிகள் நிறுவப்படுமென்றும் அவர் சொன்னார்.

தஞ்சோங் பகார்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

  • தமது குழுவினரை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தால், நகர மன்றத்தைத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்று திரு. மைக்கல் சுவா கூறினார். வலுவான, இன்னும் சிறந்த நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்காகத் தங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

வெஸ்ட் கோஸ்ட்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

  • மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக்.
  • அரசாங்கம் சொல்வதைக் கேள்வி கேட்காமல் பின்பற்றும் பழக்கத்தை விடுத்து மாற்று வழியில் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இயோ சூ காங்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

  • சிங்கப்பூரின் அக்கறைக்குரிய அம்சங்களைப் பாதுகாக்கும் வகையில் பரிவுமிக்க அரசாங்கம் தேவைப்படுவதாகக் கூறினார் தனித்தொகுதியில் போட்டியிடும் திருமதி கெய்லா லோ. எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளுக்குத் தாம் குரல் எழுப்ப உள்ளதாகக் கூறினார் அவர்.

யூஹுவா

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

  • நோய்ப்பரவல் காலத்தில் தேர்தலை நடத்துவதில் உள்ள அபாயம்பற்றிப் பேசிய திரு. ராபின் லோ, பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட ஒருவர் வாக்களிக்கச் சென்றால்கூட, எளிதில் கிருமி மற்றவர்களுக்குப் பரவிவிடுமே என்றார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்