பொதுத்தேர்தல் 2020

Images
  • pap thank you

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவித்த மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள்

பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிவாசிகளுக்கு நன்றி தெரிவிக்க சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களில் திரண்டனர்.

ஈஸ்ட் கோஸ்ட்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தம் குழுவினருடன் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திற்குச் சென்றார். வரும் ஆண்டுகளில் மக்களுக்குச் சேவையாற்ற தம் குழு கடமைபட்டுள்ளதாக அவர் கூறினார்.


ஜாலான் புசார்

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ வழிநடத்திய குழு இன்று காலை குடியிருப்பாளர்களைச் சந்தித்தது. எதிர்வரும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தம் Facebook பக்கத்தில் சுட்டிய திருமதி தியோ மக்களின் ஆதரவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.


மெக்பெர்சன்

சர்க்கியுட் ரோடு உணவங்காடியில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கச் சென்ற திருவாட்டி டின் பெய் லிங், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளால் இம்முறை நன்றி தெரிவிப்பது சற்று வேறுபடுவதாகக் கூறினார்.


மேரிமவுண்ட்

புதிய மேரிமவுண்ட் தனித்தொகுதியில் வெற்றிபெற்ற முதன்முறை வேட்பாளர் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் தமக்கு ஆதரவு வழங்கியோருக்கு நன்றி தெரிவித்தார். நேற்றிலிருந்து தொகுதியில் தம் பணிகள் தொடங்கியதாக அவர் கூறினார்.


நீ சூன்

நீ சூன் குழுத்தொகுதியில் வெற்றிபெற்ற அணியினர் நேற்றே தங்கள் தொகுதிவாசிகளைச் சந்தித்தனர். யீஷுன் அக்கம்பக்கப் பூங்கா, நீ சூன் சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு அமைச்சர் கா. சண்முகத்தின் குழுவினர் சென்றனர்.


 

Top