Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இறுதி நாள் தொகுதி அரசியல் ஒளிபரப்பு- மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் - ஒரு தொகுப்பு

மீடியாகார்ப் தளங்களில் இன்று இறுதி நாளாகத் தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் இரவு 7 மணியிலிருந்து இடம்பெற்றன.

வாசிப்புநேரம் -
இறுதி நாள் தொகுதி அரசியல் ஒளிபரப்பு- மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் - ஒரு தொகுப்பு

(படம்: CNA)

மீடியாகார்ப் தளங்களில் இன்று இறுதி நாளாகத் தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் இரவு 7 மணியிலிருந்து இடம்பெற்றன.

அதில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் முன்வைத்த அம்சங்கள்...
ஒரு தொகுப்பு...

தெம்பனிஸ் குழுத்தொகுதி

  • இளையர்கள் நமது எதிர்காலம் என்றார் டாக்டர் கோ போ கூன். இளையர்கள் தங்களது எதிர்காலம் நீடித்து நிலைக்கக்கூடிய ஒன்றாக அமைய வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார்.
  • தெம்பனிஸ், சிங்கப்பூரின் முதல் பசுமைக் குழுத்தொகுதியாக விளங்கும் என்றார் டாக்டர் கோ.
  • Tampines Central பூங்கா மேம்படுத்தப்படும். எல்லா வயதினரும் ரசிக்கத்தக்க துடிப்பான சமூகத் தலமாக அது விளங்கும் என்றார் அவர். 

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி

  • மின்னிலக்கமயமான எதிர்காலத்திற்கு இளையோரைத் தயார் செய்ய Catchplus போன்ற திட்டங்கள் உதவும் என்று திரு. அல்வின் டான் தெரிவித்தார். அது ஜாலான் குகோ அக்கம்பக்க வட்டாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிக்குப் பிந்திய நடவடிக்கை நிலையமாகச் செயல்படுகிறது அது. மாணவர்கள் அங்கே விளையாட்டு, நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதோடு தொழில்நுட்ப வகுப்புகளிலும் பங்கேற்கலாம்.
  • பசுமைத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று குமாரி இந்திராணி ராஜா தெரிவித்தார்.
  • உதவியும் ஆதரவும் தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்குத் தேவையான புதிய சமூகத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
  • தஞ்சோங் பகார் என்பது ஒரு குழுத்தொகுதி மட்டுமல்ல, அது நமது இதயம் விரும்பும் இல்லம் என்று வருணித்தார் குமாரி இந்திராணி ராஜா. 

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி

  • வேலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் பல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றைச் செயல்படுத்த அரசாங்கமும் மக்களும் அணுக்கமாகச் செயலாற்ற வேண்டும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
  • நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாகச் செயலாற்றுவோம் என்றும் அவர் சொன்னார்.
  • முதலாளிகளுடன் இணைந்து வேலைகளை வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குக் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் திருவாட்டி ஃபூ மீ ஹார் கூறினார்.
  • இதுவரை அடித்தளத் தொண்டூழியர்கள் 100க்கும் அதிகமானோர் தொழில் வழிகாட்டிகளாகப் பணியாற்ற முன்வந்துள்ளனர். குடியிருப்பாளர்களின் வேலைத் தேடல் முயற்சிகளுக்கு அந்த வழிகாட்டிகள் உதவி செய்வர் என்றார் திருவாட்டி. ஃபூ. 

இயோ சூ காங் தனித்தொகுதி

  • Silver Generation அலுவலகத்தில் 3,000 தொண்டூழியர்கள் சேவையாற்றியுள்ளதாகத் திரு. யிப் ஹோன் வெங் தெரிவித்தார். அவர்கள் 600,000க்கும் அதிகமான மூத்தோரைச் சென்றடைந்துள்ளனர் என்றார் அவர். மூத்தோர், மற்றவர்களைச் சார்ந்திராமல் வாழத் தேவையான பராமரிப்பு, உதவி ஆகியவற்றை அவர்கள் வழங்கினர்.
  • சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூத்தோருக்கான பராமரிப்பு கட்டுப்படியான கட்டணத்தில் இருக்க வேண்டும். அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் அவர். 

யூஹுவா தனித்தொகுதி

கிரேஸ் ஃபூ

  • பொதுவாக மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களிடம் நேர்மை, நாணயம், சேவை ஆகிய முக்கியப் பண்புகள் இருக்கும் என்று திருவாட்டி கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
  • மக்கள் செயல் கட்சி சொன்னதைச் செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்றார் அவர்.
  • வாக்காளர்கள், வேட்பாளர்களின் பண்புகளை நன்கு ஆராய வேண்டும். இந்தப் பண்புகள்தான் அவர்களது நடவடிக்கைகளை வழிநடத்தும் என்றார் அவர்.
  • மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களின் வேறுபட்ட பின்னணி, எல்லாத் தரப்பினரின் கண்ணோட்டமும் கருத்தில் கொள்ளப்பட்டுப் பொருத்தமான கொள்கை முடிவை எடுப்பதை உறுதி செய்ய உதவுவதாகச் சொன்னார் திருவாட்டி ஃபூ.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்