Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'இது மாற்றத்துக்கான நேரம்' எனும் தலைப்பில் மக்கள் குரல் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை

மக்கள் குரல் கட்சி, 'இது மாற்றத்துக்கான நேரம்' எனும் தலைப்பில் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
'இது மாற்றத்துக்கான நேரம்' எனும் தலைப்பில் மக்கள் குரல் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை

படம்: Louisa Tang

மக்கள் குரல் கட்சி, 'இது மாற்றத்துக்கான நேரம்' எனும் தலைப்பில் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் பலருக்கும் நியாயமான, மேலும் வளப்பமான சமூகத்தை அமைத்துத் தர விரும்புவதாகவும், சிலர் மட்டும் வசதிகளை அனுபவிக்கக்கூடாது என்றும் அக்கட்சி கூறியது.

பொதுத்தேர்தலில் மக்கள் குரல் கட்சி 10 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடுகிறது.

வேலையிழந்த சிங்கப்பூரர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெற உதவுவது அதன் அறிக்கையில் முக்கியத்துவம் பெற்றுள்ள அம்சம்.

வெற்றிபெற்றால், வெளிநாட்டு ஊழியர்களுக்கான மேல்நிலை வேலை அனுமதி விகிதத்தைக் குறைக்கும்படி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என்று மக்கள் குரல் கட்சி கூறியது.

குறைந்தபட்ச சம்பளம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கட்சி வலியுறுத்தும்.

அரசாங்கம் முன்னர் உறுதிகூறியபடி, 55 வயதுக்குப் பிறகு ஓய்வுத்தொகையைப் பயன்படுத்த அனுமதி வழங்கவேண்டும் என்றும் அது கூறியது.

வாழ்க்கைச் செலவினம், வர்த்தகச் செலவுகளைக் குறைப்பதுடன், அரசாங்கத்தின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதும் கட்சியின் இலக்குகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்