பொதுத்தேர்தல் 2020

Images
  • bugis junction
    படம்: Facebook/Bugis Junction x Bugis+/Google Images

Bugis Junction கடைத்தொகுதி, ICA கட்டடம் உள்ளிட்ட 21 இடங்களுக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றிருந்தனர்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் மேலும் 21 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அவற்றுள் கடைத்தொகுதிகள், உணவு,பானக் கடைகள், ஈரச்சந்தை, வங்கி முதலியவையும் அடங்கும்.

  • City Square கடைத்தொகுதியில் உள்ள OCBC வங்கி
  • West Mall கடைத்தொகுதியில் உள்ள KFC உணவகம்
  • Bugis Junction கடைத்தொகுதி
  • Tang Plaza கடைத்தொகுதி
  • குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் கட்டடம்
  • புக்கிட் பாஞ்சாங் ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம்
  • சைனாடவுன் உணவங்காடி நிலையம்

உள்ளிட்ட இடங்களுக்குப் பாதிக்கப்பட்டோர் சென்றிருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நோய்த்தொற்று உறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தொடர்புகொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டோர் சென்றுவந்த இடங்களுக்குப் பொதுமக்கள் சென்றிருந்தால் உடல்நலத்தை அணுக்கமாகக் கவனிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
 

Top