பொதுத்தேர்தல் 2020

Images
  • PM lee
    (படம்:Facebook/PAP Teck Ghee)

அங் மோ கியோ குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், அங் மோ கியோ குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று தொகுதி உலா மேற்கொண்டார்.

அந்தக் குழுத்தொகுதியில் அவரது தலைமையில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி வென்றது.


பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் தாம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லை என்றபோதும் சிங்கப்பூரர்களின் பரவலான ஆதரவை அது காட்டுவதாகப் பிரதமர் நேற்றுக் கூறியிருந்தார்.

மக்கள் செயல் கட்சி 61.2 விழுக்காடு வாக்குகள் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.


அங் மோ கியோவின் பல பகுதிகளுக்குச் சென்ற திரு லீயுடன் மக்கள் படம் எடுத்துக்கொண்டதுடன் அவருக்கு வாழ்த்துகளையும் கூறினார்.

அங் மோ கியோ தொகுதி 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் திரு. லீ அதனை வழிநடத்தி வருகிறார்.

அவரின் ஐந்து உறுப்பினர் அணி, இந்தத் தேர்தலில் சீர்த்திருத்தக் கட்சிக்கு எதிராகக் களமிறங்கி 71.9 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

Top