பொதுத்தேர்தல் 2020

Images
  • PM LEE
    படம்: People's Action Party

தேர்தல் முடிவுகள் சிங்கப்பூரர்களின் வலியையும், நிச்சயமற்ற தன்மையையும் பிரதிபலிக்கிறது: பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், பொதுத்தேர்தல் முடிவுகள் சிங்கப்பூரர்களின் வலியையும், நிச்சயமற்ற தன்மையையும் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.

இன்று அவர் தமது Facebook பதிவில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தல், சிரமமான சூழலுக்கு இடையே நடைபெற்றதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

பல பிரச்சினைகளைச் சந்திக்கும் மக்கள், இன்னும் சிரமமான வருங்காலத்தை எதிர்நோக்கியுள்ள வேளையில் பொதுத்தேர்தல் நடைபெற்றதாகத் திரு. லீ சொன்னார்.

பிரசாரத்தின்போது உண்மை நிலவரத்தை மக்கள் உணர்த்தினர். அதற்குரிய தீர்வுகளைக் காண வேண்டும் என்று திரு. லீ கூறினார்.

மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த அவர், இன்றே புதிய அரசாங்கத்தின் வேலை தொடங்குவதாகக் கூறினார்.

கிருமிப் பரவல், பொருளியல் மந்தநிலை போன்ற நெருக்கடிகளைச் சமாளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்க மக்கள் தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாகத் திரு. லீ உறுதியளித்தார். 

Top