பொதுத்தேர்தல் 2020

Images
  • xi jinping (1)
    (கோப்புப் படம்: AFP)

மக்கள் செயல் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு சீன அதிபர் வாழ்த்து

சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றிப்பெற்றதற்கு சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) பிரதமர் லீ சியென் லூங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.

அப்போது, சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள நீண்ட கால உறவைத் திரு. லீயும் திரு. சீயும் மறுவுறுதிப்படுத்திக்கொண்டனர்.

அத்துடன், COVID-19 சூழலுக்கு மத்தியில் பொருளியலை மீட்டெடுப்பது குறித்தும் 'இணைப்புப் பாதையும்' போன்ற திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இருநாட்டுத் தலைவர்களும் உரையாடினர்.

சீனாவில் ஏற்பட்ட அண்மை வெள்ளத்துக்காக திரு. லீ தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

அதிலிருந்து மீண்டுவர சீனாவால் முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Top