தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் - இன்று இடம்பெறவிருக்கும் உரைகளின் விவரங்கள்
தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் - இன்று இடம்பெறவிருக்கும் உரைகளின் விவரங்கள்
மீடியாகார்ப் தளங்களில் இன்று மேலும் 5 தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் இடம்பெறவுள்ளன.
தொகுதி அரசியல் ஒளிபரப்புகளின் கடைசி நாள் இன்று.
இன்று இடம்பெறவுள்ள தொகுதி அரசியல் ஒளிபரப்புகளின் விவரங்கள்:
தெம்பனிஸ் குழுத்தொகுதி
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி
இயோ சூ காங் தனித்தொகுதி
யூஹுவா தனித்தொகுதி
ஒளிபரப்புகள் இன்றிரவு 7 மணிக்குத் தொடங்கும்.
அவற்றை, ஒளிவழி 5, cna.asia, 8world.com, CNA-யின் Youtube பக்கம், CNA-யின் Facebook பக்கம், TODAY செய்தி இணையத்தளம் ஆகியவற்றில் காணலாம்.
அது, CNA938 வானொலியிலும் ஒலிபரப்பப்படும்.
தொகுதி அரசியல் ஒளிபரப்புகள் ஆங்கில அகரவரிசையில் இடம்பெற்று வருகின்றன.
தனித்தொகுதிகளின் ஒளிபரப்புகளில் ஒவ்வொரு வேட்பாளரும் 3 நிமிடங்களுக்குப் பேசலாம்.
குழுத்தொகுதிகளின் ஒளிபரப்புகளில், 4 உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் 12 நிமிடங்களும், 5 உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் 15 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன.
மீடியாகார்ப் நிறுவனம், பொதுத்தேர்தல் தொடர்பான தகவல்களை, 4 அதிகாரத்துவ மொழிகளிலும் அதன் பல்வேறு தளங்களின் வழி விரிவாக வழங்கிவருகிறது.