பொதுத்தேர்தல் 2020

Images
  • pritam

சிங்கப்பூருக்கு தொடர்ந்து விசுவாசமாக இருப்போம் : பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமது கட்சி தொடர்ந்து சிங்கப்பூருக்கு விசுவாசமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தமது தலைமையின்கீழ், பாட்டாளிக் கட்சி சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யப் போவதாக அவர் சொன்னார்.

பாட்டாளிக் கட்சியின் Facebookஇல், திரு. சிங் அதனைத் தெரிவித்தார்.

பிரதமர் லீ சியென் லூங், இன்று காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில், திரு. சிங் நியமிக்கப்படுவார் என அறிவித்தது பற்றியும் அவர் கருத்துரைத்தார்.

தம்மால் இயன்ற அளவுக்கு, சிறப்பாக அந்தப் பொறுப்பை நிறைவேற்ற ஆவலோடு காத்திருப்பதாகத் திரு. சிங் குறிப்பிட்டார்.

பாட்டாளிக் கட்சியின் பல்லாண்டுகாலப் பயணத்தின் அத்தனை ஏற்ற, இறக்கத்தின்போதும் உடனிருந்த அனைவருக்கும், தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.  

Top