Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

படித்தொகையில் பாதியைக் குறைந்த வருமானக் குடியிருப்பாளர்களுக்கும், மற்ற தேவைகளுக்கும் ஒதுக்குவேன்: எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங்

எதிர்த்தரப்புத் தலைவராக பொறுப்பேற்கும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமக்கு வழங்கப்படவிருக்கும் படித்தொகையில் பாதியைக் குறைந்த வருமானம் ஈட்டும் குடியிருப்பாளர்களுக்கும், மற்ற தேவைகளுக்கும் ஒதுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

எதிர்த்தரப்புத் தலைவராக பொறுப்பேற்கும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமக்கு வழங்கப்படவிருக்கும் படித்தொகையில் பாதியைக் குறைந்த வருமானம் ஈட்டும் குடியிருப்பாளர்களுக்கும், மற்ற தேவைகளுக்கும் ஒதுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

அதனையொட்டி, அவர் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எதிர்த்தரப்புத் தலைவராக, திரு. சிங்கிற்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்; அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரைப்போல இருமடங்கு படித்தொகையும் வழங்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அவர், வருடாந்தரப் படித்தொகையாக 385,000 வெள்ளியைப் பெறுவார்.

அது குறித்துத் தம் மனைவியுடன் கலந்துபேசியதாகவும், படித்தொகையின் ஒரு பகுதி பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்று முடிவு செய்ததாகவும் திரு. சிங் கூறினார்.

வரி கழிக்கப்பட்ட படித்தொகையில் பாதி இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் திரு சிங்.

  • குறைந்த வருமானம் ஈட்டும் ஹவ்காங் தனித்தொகுதி, அல்ஜூனிட் குழுத்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு. அது பாட்டாளிக் கட்சியின் சமூக நிதி மூலமாகவோ, அடித்தளக் குழு மூலமாகவோ வழங்கப்படலாம்.
  • ஹவ்காங் தனித்தொகுதி, அல்ஜூனிட் குழுத்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி ஆகியவற்றுக்கான சமூகத் திட்டங்கள்
  • அறநிதி அல்லது அனுகூலமிக்க திட்டங்கள்
  • கட்சியின் குறிப்பிட்ட தேவைகள்

சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றுவது ஒரு கௌரவம். அதே வேளையில் எதிர்த்தரப்புத் தலைவராக பொறுப்பேற்பது ஒரு சிறப்புரிமை. சிங்கப்பூருக்குச் சேவையாற்றும் வாய்ப்புக் கிடைத்ததற்கு நானும் என் சக கட்சி உறுப்பினர்களும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். 

என்று திரு. சிங் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்