பொதுத்தேர்தல் 2020

Images
  • PSP
    கோப்புப் படம்: Gaya Chandramohan

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்குக் கிடைத்துள்ள சாராசரி வாக்கு விகிதம் 40 விழுக்காடு - பெருமிதம் கொள்கிறார் டாக்டர் டான் செங் போக்

பொதுத்தேர்தலில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு விகிதம் சராசரி 40 விழுக்காடு. அதை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக் (Tan Cheng Bock) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் தோல்வி கண்டது.

இருப்பினும், முடிவுகளால் தளர்ந்துவிடவில்லை என்றும் அடுத்த தேர்தலில், மேலும் முன்னேறுவோம் என்றும் டாக்டர் டான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"கட்சியின் புதிய அத்தியாயத்திற்கு இது தொடக்கம் என்றும், தாம் உருவாக்கிய இயக்கம் மேலும் வளர்ச்சி பெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் அவ்வாறு சொன்னார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில், டாக்டர் டான் தலைமையில் களமிறங்கிய அணியினர் 48.31% வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தனர்.

51.69 % வாக்குகளைப் பெற்ற மக்கள் செயல் கட்சி, 3.38 விழுக்காட்டு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Top