Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹேசல் புவா, லியோங் மன் வாய் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வர்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹேசல் புவா (Hazel Poa), லியோங் மன் வாய் (Leong Mun Wai) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹேசல் புவா, லியோங் மன் வாய் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வர்

(படம்: Keerthigar)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹேசல் புவா (Hazel Poa), லியோங் மன் வாய் (Leong Mun Wai) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், ஹேசல் புவா, லியோங் முன் வாய், கட்சி தலைமைச் செயலாளர் டான் செங் போக் (Tan Cheng Bock), ஜெஃப்ரி கூ (Jeffrey Khoo),
நடராஜா லோகநாதன் (Nadarajah Loganathan) ஆகியோர் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டனர்.

தொடர்பு, தகவல் அமைச்சர் ஈஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அங்கு வெற்றிபெற்றது.

அந்தக் குழுத்தொகுதியில் 48.31 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்ற சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 'சிறந்த தோல்வியாளர்களாகத்' தேர்தெடுக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து அந்தத் தொகுயில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்குத் தகுதிபெற்றனர்.

ஹேசல் புவாவும் லியோங் மன் வாயும் பாட்டாளிக் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பாகச் செயல்படுவர்.

பாட்டாளிக் கட்சியின் 10 உறுப்பினர்கள் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் குறைந்தது 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்களுக்கு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்