Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மக்களுக்குத் தேவையான நேரத்தில் கைகொடுப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்ய வேண்டும்: பிரதமர் லீ

குடியிருப்பாளர்களுடன் உறுதியான உறவைக் கொண்டிருக்க விரும்பும்   நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்குத் தேவையான நேரத்தில் கைகொடுக்கத் தாங்கள் இருப்போம் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மக்களுக்குத் தேவையான நேரத்தில் கைகொடுப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்ய வேண்டும்: பிரதமர் லீ

கோப்புப் படம்: CNA

குடியிருப்பாளர்களுடன் உறுதியான உறவைக் கொண்டிருக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்குத் தேவையான நேரத்தில் கைகொடுக்கத் தாங்கள் இருப்போம் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

அங் மோ கியோ குழுத் தொகுதியில் தம்முடன் இணைந்து களமிறங்கும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் டெரில் டேவிட் (Darryl David), கான் தியாம் போ (Gan Thiam Poh), நாடியா அஹமது (Nadia Ahmad Samdin),இங் லிங் லிங் (Ng Ling Ling) ஆகியோருடன் நடத்திய இணையவழிக் கலந்துரையாடலில் அவர் அவ்வாறு கூறினார்.

அதில் பங்கேற்ற ஒருவர், பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குடியிருப்பாளர்களுடன் பல ஆண்டாய் நல்லுறவை ஏற்படுத்தியதைச் சுட்டியதுடன், புதிய வேட்பாளர்கள் அதன் தொடர்பில் வைத்திருக்கும் திட்டம் பற்றிக் கேள்வி எழுப்பினார்.

வேட்பாளர் டேவிட் அதற்குப் பிரதமரின் அறிவுரையை நாடினார்.

உற்சாகத்துடன் விரைந்து உறவுகளைத் தொடங்கவேண்டும்; அதனை நீண்டகாலத்துக்குப் பேணவேண்டும்

என்று திரு. லீ பதிலளித்தார்.

தேவையின்போது கைகொடுப்போம் என்ற நம்பிக்கையைக் குடியிருப்பாளருக்குத் தரவேண்டும். அத்தகைய தனிப்பட்ட உறவு சாத்தியமானால், அது விலைமதிக்க முடியாதது என்றார் அவர்.

தங்கள் பணி திருப்தியானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்றார் திரு.லீ.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்