பொதுத்தேர்தல் 2020

Images
  • RTS Suspended Again
    (படம்: LTA)

ஜொகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை மாத இறுதிக்குள் முடிவுறும் : போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை

ஜொகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் முடிவுறும் என்று நம்புவதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூரும் மலேசியாவும் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

எஞ்சிய விவகாரங்களுக்கு இம்மாதத்திற்குள் தீர்வுகாண முடியும் என்று அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திட்டம் தொடர்பிலான மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விரைவு ரயில் திட்டத்திற்கான காலவரம்பு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்குக் காத்திருப்பதாகவும் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் சுட்டினார்.

ஜொகூர் பாருவின் புக்கிட் சகார் பகுதியையும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸையும் இணைக்கும் விரைவு ரயில் திட்டத்தால் இருவழியிலும் அன்றாடம் மணிக்குச் சுமார் 10,000 பயணிகள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top