பொதுத்தேர்தல் 2020

Images
  • pritam (1)

செங்காங்கில் சுமுகமான முறையில் நகர மன்றப் பொறுப்புகளைக் கைமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பாட்டாளிக் கட்சி

சிங்கப்பூரின் பாட்டாளிக் கட்சி, செங்காங் குழுத்தொகுதிக்கான நகர மன்றப் பொறுப்புகளைச் சுமுகமான முறையில் கைமாற்றிக்கொள்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

அத்துடன், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி போன்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பாட்டாளிக் கட்சி இணையச் செய்தியாளர் கூட்டம் வழி தெரிவித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத்தொகுதியில் 120,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

முன்னைய பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியின் ஒரு பகுதி, பாசிர்-ரிஸ் பொங்கோல் குழுத்தொகுதியில் அங்கம் வகித்த செங்காங் செண்ட்ரல் பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டு புதிய செங்காங் குழுத்தொகுதி உருவாகியுள்ளது. 

Top