பொதுத்தேர்தல் 2020

Images
  • jamus

செங்காங் குழுத்தொகுதி நிர்வாக மாற்றம் தொடர்பில் தற்போதைய நகர மன்றங்களைச் சந்திக்க விரும்பும் பாட்டாளிக் கட்சி

செங்காங் குழுத்தொகுதியின் நிர்வாக மாற்றம் குறித்துத் தற்போதைய நகர மன்றப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தக் கேட்டுக்கொண்டிருப்பதாய்ப் பாட்டாளிக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அது குறித்துப், பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதிக் குழுவினரை வழிநடத்தும் ஹி டிங் ரு (He Ting Ru) Facebook பதிவில் குறிப்பிட்டார்.

புதிதாய் அமைக்கப்பட்டுள்ள செங்காங் குழுத்தொகுதி தற்போது, அங் மோ கியோ நகர மன்றம், பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

இருப்பினும், பொதுத்தேர்தலில் அந்தக் குழுத்தொகுதியை வென்ற பாட்டாளிக் கட்சியினர், செங்காங்கில் புதிய நகர மன்றத்தை உருவாக்கவுள்ளதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சிடம் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, நிர்வாக மாற்றம் குறித்து, நகர மன்றப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, குழுவினர் விருப்பம் தெரிவித்தனர்.

தற்போதைய நகர மன்றங்களிலிருந்து, நகர மன்ற நிர்வாக மென்பொருளையும், நிர்வாக முகவர் சேவை உடன்படிக்கைகளையும் கேட்டிருப்பதாகக் குமாரி ஹி கூறினார். 

Top