பொதுத்தேர்தல் 2020

Images
  • polling election

சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தல் 2020: வேட்பாளர்கள் மொத்தச் செலவு சுமார் 9.2 மில்லியன் வெள்ளி

சிங்கப்பூரின் அண்மைப் பொதுத் தேர்தலில், வேட்பாளர்கள் மொத்தம் சுமார் 9.2 மில்லியன் வெள்ளி செலவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒப்புநோக்க 2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குச் செலவிட்டதைவிட அது 30 விழுக்காடு அதிகம்.

தேர்தல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட செலவின விவரங்களின்படி, மக்கள் செயல் கட்சி ஆக அதிகமாகச் சுமார் 7 மில்லியன் வெள்ளி செலவிட்டது.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும், பாட்டாளிக் கட்சியும் இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் உள்ளன.

எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் மொத்தம் 2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகச் செலவிட்டனர்.

இந்த ஆண்டின் பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிட்ட தொகை பெரும்பாலும் விளம்பரச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டது.

அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்ட தொகையை விடக் கணிசமாகக் குறைவாகவே செலவிட்டது தெரியவந்துள்ளது.

ஒரு வாக்காளருக்கு 4 வெள்ளி என்ற அடிப்படையில் செலவிட அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வேட்பாளர்களின் செலவினக் குறிப்பேட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வரை பார்வையிடலாம். 

Top