Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொகுதி அரசியல் ஒளிபரப்பு குறித்துத் சீர்திருத்தக் கட்சிக்கு முன்கூட்டியே தகவல் தரப்படவில்லை என்பது பொய்: IMDA

சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் (Kenneth Jeyaretnam), தொகுதி அரசியல் ஒளிபரப்பு குறித்துத் தங்கள் கட்சிக்கு முன்கூட்டியே தகவல் தரப்படவில்லை என்று குறிப்பிட்டது பொய் என்று தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
தொகுதி அரசியல் ஒளிபரப்பு குறித்துத் சீர்திருத்தக் கட்சிக்கு முன்கூட்டியே தகவல் தரப்படவில்லை என்பது பொய்: IMDA

(படம்: The Reform Party/Facebook)

சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் (Kenneth Jeyaretnam), தொகுதி அரசியல் ஒளிபரப்பு குறித்துத் தங்கள் கட்சிக்கு முன்கூட்டியே தகவல் தரப்படவில்லை என்று குறிப்பிட்டது பொய் என்று தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் கூறியிருக்கிறது.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சென்ற மாதம் 26ஆம் தேதி ஒளிபரப்பு குறித்து விளக்கிக் கூறப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு மறுநாள் இம்மாதம் முதல் தேதி, ஒளிப்பதிவு நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் தகவல் தரப்பட்டது.

சீர்திருத்தக் கட்சிக்கும் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் தகவல் அளிக்கப்பட்டதாய் ஆணையம் கூறியது.

மறுநாள் ஒளிப்பதிவு நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாக, அதனைத் தள்ளிப்போடும்படி கட்சி மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால் கட்சியின் பிரதிநிதிகள் இருவர் ஒளிப்பதிவுக் கூடத்திற்கு அப்போது வந்திருந்தனர்.

அந்த நேரத்தில் ஒளிப்பதிவு அட்டவணையை மாற்றியமைக்க முடியாது என்பதால் திட்டமிட்டபடி ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்