Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எல்லாத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க பற்பல திட்டங்கள்: அமைச்சர் சண்முகம்

நோய்ப்பரவல் நெருக்கடிச் சூழலில், பொருளியலும் வேலைகளும் குறித்த கேள்விகளே மக்களின் முதன்மையான அக்கறைக்குரிய அம்சங்களாய் விளங்குவதாகச் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.

வாசிப்புநேரம் -
எல்லாத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க பற்பல திட்டங்கள்: அமைச்சர் சண்முகம்

காணொளிலிலிருந்து எடுக்கப்பட்ட படம்

நோய்ப்பரவல் நெருக்கடிச் சூழலில், பொருளியலும் வேலைகளும் குறித்த கேள்விகளே மக்களின் முதன்மையான அக்கறைக்குரிய அம்சங்களாய் விளங்குவதாகச் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்புகள், உதவித் திட்டங்கள் இருப்பதைச் 'செய்தி'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் சுட்டினார்.

குறைந்த வருமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவ, சமூக, குடும்ப மேம்பாட்டு அமைப்பு திட்டங்களை வகுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், PMET எனும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் நடுத்தர ஊழியர்களுக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகளும் பயிற்சித் திட்டங்களும் இருப்பதாகச் சொன்னார்.

நீ சூன் குழுத்தொகுதி வேட்பாளரான திரு. சண்முகம், சமூக ஊடகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்திய இளையர்களுடன் பேசினார்.

திரு. சண்முகம் கடந்த 32 ஆண்டாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். குமாரி கேரி டான், டேரிக் கோ ஆகியோர் இம்முறை அவருடைய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இருவருக்கும் நல்ல அனுபவம் உள்ளது, அவர்கள் இருவரும் நல்ல மனம் படைத்தவர்கள். முக்கியமாக அவர்கள் உண்மையானவர்கள். 

என்றார் திரு. சண்முகம்.

பொருளாதாரம், வேலைகளைத் தாண்டி வேறு என்னென்ன செய்யப்படலாம் என்று கேட்டபோது மூப்படையும் சமூகம், சுகாதாரம், போட்டித்தன்மை போன்ற பிரச்சினைகளை அவர் நீண்டகால அடிப்படையில் குறிப்பிட்டார். குறுகியகால அடிப்படையில் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் திரு. சண்முகம் கூறினார்.

நாடு நல்ல நிலைமையில் இருக்கவேண்டும் என்றால் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் வரவேண்டும். முதலில் இது முக்கியமான காலக்கட்டம். இதைத் தாண்ட வேண்டும்.

புதிய செங்காங் குழுத்தொகுதியில் கடும் போட்டி நிலவும் வேளையில் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல வேட்பாளர்கள் அந்தத் தொகுதியில் நிற்பதாக அமைச்சர் சண்முகம் சுட்டினார். வேலைகளைப் பற்றிய தொகுதிவாசிகளின் அக்கறைகளைத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நிச்சயமாகத் தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்