Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை, முதல் சம்பவம் உறுதியானபோதே மூடியிருக்க வேண்டும்-டான் செங் போக்

COVID-19 காலக்கட்டத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் கையாளப்பட்ட விதம் குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் (Tan Cheng Bock) குறைகூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை, முதல் சம்பவம் உறுதியானபோதே மூடியிருக்க வேண்டும்-டான் செங் போக்

கோப்புப் படம்: Hanidah Amin

COVID-19 காலக்கட்டத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் கையாளப்பட்ட விதம் குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் (Tan Cheng Bock) குறைகூறியிருக்கிறார்.

கிருமித்தொற்று எவ்வளவு வேகமாக பரவும் என்பதை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.

முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டபோதே, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை, உடனடியாக மூடியிருக்க வேண்டும்.

என்று டாக்டர் டான் கருத்துரைத்தார்.

தாம் ஒரு மருத்துவர் என்பதால், பிரச்சினை என்று தெரிந்தவுடன் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் செயல்பாடுகளை உடனடியாக முடக்கியிருப்பேன் என்றார் டாக்டர் டான்.

கிருமி தொற்றியவர்களை ஒவ்வொருவராக அடையாளம் காண்பது கடினம் என்பதால் கிருமித்தொற்றைக் கையாள அடிப்படை அணுகுமுறையைத் தாம் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் உடனடியாக மூடப்படாததால் தற்போது அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பதாய் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்