பொதுத்தேர்தல் 2020

Images
  • pritam singh
    கோப்புப் படம்

'பிரித்தம் சிங்கை எதிர்த்தரப்புத் தலைவராக நியமிப்பது சிங்கப்பூர் அரசியலை மாற்றியமைக்கும்': டான் செங் போக்

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கை, எதிர்த்தரப்புத் தலைவராக அரசாங்கம் அதிகாரபூர்வமாக நியமிப்பது, சிங்கப்பூர் அரசியலை மாற்றியமைக்கும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைமைச் செயலாளர் டான் செங் போக் (Tan Cheng Bock) கூறியுள்ளார்.

வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் தொகுதி உலா சென்றபோது திரு. டான், அவ்வாறு கூறினார்.

மக்கள் செயல் கட்சியுடன் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பொருதியது.

மக்கள் செயல் கட்சி அணி 51.7 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 48.3 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

93 நாடாளுமன்ற இடங்களில் பாட்டாளிக் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து பிரதமர் லீ சியென் லூங், திரு. சிங்கிற்கு எதிர்த்தரப்புத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்றார்.

சிறந்த சிங்கப்பூரை உருவாக்க திரு. சிங்குடன் இணைந்து செயல்படப்போவதாக டாக்டர் டான் சொன்னார்.

Top