Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தொற்றிலிருந்து மீண்டுவர இளையர்களின் பங்கு அவசியம்: அமைச்சர் தர்மன்

சிங்கப்பூர் COVID-19 நோய்த்தொற்றிலிருந்து ஒற்றுமையான, ஆழமான பல்லின சமுதாயமாக மீண்டுவர, சிங்கப்பூர் இளையர்கள் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
COVID-19 தொற்றிலிருந்து மீண்டுவர இளையர்களின் பங்கு அவசியம்: அமைச்சர் தர்மன்

(கோப்புப் படம்: Ministry of Communications and Information)

சிங்கப்பூர் COVID-19 நோய்த்தொற்றிலிருந்து ஒற்றுமையான, ஆழமான பல்லின சமுதாயமாக மீண்டுவர, சிங்கப்பூர் இளையர்கள் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க முயலும் அரசாங்கத்தின் திட்டங்களை அவர் கோடிகாட்டினார்.

இரண்டு பில்லியன் மதிப்புள்ள வேலையின்மை அனுகூலத் திட்டத்தைவிட, இரண்டு பில்லியன் மதிப்புள்ள வேலை, திறன் ஆதரவுத்திட்டம் இன்னும் கூடுதல் நன்மையளிக்கும் என்றார் திரு தர்மன்.

மத்திய சேமநிதி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் அரசாங்கம் தன் பங்கை ஆற்றியுள்ளதை அவர் சுட்டினார்.

இருப்பினும், வயதான காலத்தில் ஏற்றத்தாழ்வைத் தடுக்க கூட்டாகப் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம் என்றார் திரு. தர்மன்.

இளைய தலைமுறையினர், நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க முன்வந்தால், கிருமிப்பரவலுக்குப் பின்னரும், அடுத்த தலைமுறைக்கும் அது நீடிக்கும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்