Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு, பொறுப்புடன் சிந்தித்துச் செயல்படக்கூடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை: பாட்டாளிக் கட்சி

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (Pritam Singh), பொறுப்புடன் சிந்தித்துச் செயல்படக்கூடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூருக்குத் தேவை எனக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கு, பொறுப்புடன் சிந்தித்துச் செயல்படக்கூடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை: பாட்டாளிக் கட்சி

(கோப்புப்படம்: CNA)

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (Pritam Singh), பொறுப்புடன் சிந்தித்துச் செயல்படக்கூடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூருக்குத் தேவை எனக் கூறியுள்ளார்.

குடியிருப்பாளர்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க,
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம் நிலையான வழி அல்ல என்றும் அவர் சொன்னார்.

இந்தத் தேர்தலில் எதிர்த்தரப்பினர் அனைவருமே நிராகரிக்கப்படும் உண்மையான ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

பாட்டாளிக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை முடித்துவைத்துத் திரு. சிங் பேசினார்.

சிங்கப்பூருக்கு, எதிர்வரும் பத்து ஆண்டுகள் மிக முக்கியமானவை என்று திரு. சிங் கூறினார்.

COVID-19 நெருக்கடி, சிங்கப்பூருக்கு மிகப் பெரிய சவால் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கு அப்பாற்பட்ட மற்ற விவகாரங்களும் உள்ளன என்றார்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் இரு மடங்காகும் என்பதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூரின் ஜனநாயகத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது அவசியம் என்று^ திரு. சிங் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு தினத்துக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட இல்லாமல் போகும் சாத்தியம் உள்ளதை அவர் சுட்டினார்.

அது, கடுமையான பிரச்சினை என்றார் அவர்.

ஆளும் மக்கள் செயல் கட்சி ஓரிரு இடங்களை இழப்பதைக் காட்டிலும் அது தீவிரமான பிரச்சினை என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டுமெனத் திரு. சிங் கேட்டுக்கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்