பொதுத்தேர்தல் 2020

Images
  • iswaran
    (கோப்புப்படம்: Try Sutrisno Foo)

'வெஸ்ட் கோஸ்ட்டில் முதல் பணி, நகர மன்றத்தை அமைப்பது': அமைச்சர் ஈஸ்வரன்

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி செய்யவிருக்கும் முதல் பணி, நகர மன்றத்தை அமைப்பதுதான் என்று கட்சி அணியை வழிநடத்தும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார்.

நகர மன்றத்தை அமைத்து நகராட்சி விவகாரங்களைக் கவனிக்க வேண்டும் என்ற திரு. ஈஸ்வரன், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியையும் பயனியர் தனித்தொகுதியையும் புதிய நகர மன்றம் மேற்பார்க்கும் என்றார்.

பயனியர் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பேட்ரிக் டே (Patrick Tay) நகர மன்றத்துக்குத் தலைமை தாங்குவார் என்றும் திரு. ஈஸ்வரன் சொன்னார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய அவர் அவ்வாறு தெரிவித்தார்.

குடியிருப்பாளர்களின் கருத்துகள் தொடர்ந்து கேட்டறியப்படும் என்று சொன்ன திரு. ஈஸ்வரன், பிரசாரத்தின்போது தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை மக்கள் செயல் கட்சி அணி தொடங்கிவிட்டதாகக் கூறினார்.

மக்கள் செயல் கட்சி அணி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் வழிநடத்திய அணியுடன் வெஸ்ட் கோஸ்ட்டில் பொருதியது.

மக்கள் செயல் கட்சி அணி 3.38 விழுக்காட்டு வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

Top