Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரசாரங்களில் கலந்துகொண்டவர்கள்

கிட்டத்தட்ட 5 ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூரர்களுக்குத் தேர்தல் காய்ச்சல் வரும்.  அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் அதைப் பிரதிபலிக்கும். வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் வேட்பாளர்கள். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: கிட்டத்தட்ட 5 ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூரர்களுக்குத் தேர்தல் காய்ச்சல் வரும்.  அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் அதைப் பிரதிபலிக்கும். வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் வேட்பாளர்கள்.

வேட்பாளர்களையும் அவர்களின் கொள்கைகளையும் மதிப்பிடுவதற்கும் அவர்களின் பாதை எதை நோக்கியது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் வாக்காளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.

புழுக்கமான இரவு. இடைவிடாத தேர்தல் பிரசாரம். எதிர்க்கட்சியினர் மீது சூடான விமர்சனங்கள். வேட்பாளர்கள் சொல்வதைக் கேட்க ஆயிரக் கணக்கானோர் கூடுகின்றனர். பலருக்கு இது மகிழ்ச்சியான பொழுது.

இருக்கை, விரிப்பு, நொறுக்குத் தீனி, தண்ணீர் என்று தேவையான பொருட்களுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தைக் கேட்க வருகின்றனர்.

சிலருக்குக் கிட்டத்தட்ட இதுவோர் உல்லாசமான உற்சாகம்.

எல்லாருக்கும் அப்படியல்ல.

தங்கள் பகுதியின் வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் கொள்கைகள் என்னென்ன?

இங்கு வருவதன் மூலம் இவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்கின்றார் இவர்.

சுமார் 3 மணி நேரம் நீடிக்கிறது பிரசாரம். ஆற, அமர உட்கார்ந்து கேட்க வசதியிருக்கிறது என்கிறார் இவர்.

சென்ற வாரம் இங்கு நடந்த பிரசாரத்தை வீட்டிலிருந்தே கேட்ட இவர் தேர்தலுக்கான உணர்வு வரவில்லை என்பதால் இங்கு நடப்பதை நேரில் பார்க்க வந்ததாகச் சொல்கிறார்.

விற்பனைப் பிரிவில் பணியாற்றுகிறார் திரு. ஷான் ஃபிரான்சிஸ் டான். வயது 20. வாக்களிக்கத் தகுதி பெறவில்லை. ஆனாலும் சிங்கப்பூரெங்கும் நடக்கும் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்கிறார். ஆளுங்கட்சி என்றல்ல, எதிர்க்கட்சியின் பிரசாரங்களையும் விட்டுவைப்பதில்லை.

ஒரு குடிமகனாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள். எது இந்த நாட்டை வழிநடத்தப் போகிறது என்பதை அறிந்து கொள்வதில் இவருக்குப் பெரும் விருப்பம். அவ்வாறு செய்தால்தான் வாக்காளர்கள், இரு தரப்பு விவாதங்களையும் கேட்டு, அலசி, ஆராய்ந்து நல்ல முடிவெடுக்க முடியும் என்கிறார் திரு. ஷான் ஃபிரான்சிஸ்.

தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் மக்களிடம் சோர்வில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்பதே அனேகரின் எண்ணம்.

வேட்பாளர்களின் கருத்துகளைத் தீர ஆராய்ந்த மக்கள் நாளை மறுநாள் வாக்குகள் மூலம் நல்ல முடிவைத் தரக் காத்திருக்கிறார்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்