Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குறைவான வாக்குகளைப் பெற்ற எதிர்க்கட்சிகள்

2011ஆம் ஆண்டு வரை பொத்தோங் பாசிர் தனித்தொகுதியைத் தன்வசம் வைத்திருந்த சிங்கப்பூர் மக்கள் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் அங்கு மீண்டும் தோல்வியைக் கண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

2011ஆம் ஆண்டு வரை பொத்தோங் பாசிர் தனித்தொகுதியைத் தன்வசம் வைத்திருந்த சிங்கப்பூர் மக்கள் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் அங்கு மீண்டும் தோல்வியைக் கண்டுள்ளது. 

அக்கட்சி போட்டியிட்ட பிஷான்-தோபாயோ குழுத்தொகுதியிலும் அது பெற்ற வாக்குகள் சென்ற பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைந்தன.

சென்ற பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் திருவாட்டி லீனா சியாம் 114 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே பொத்தோங் பாசிரில் தோற்றார்.

இம்முறை அவர் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

போட்டியிட்ட தொகுதிகளில் மொத்தம் 27.08 விழுக்காட்டு வாக்குகளை மட்டுமே சிங்கப்பூர் மக்கள் கட்சி பெற்றது.

இது, சென்ற பொதுத் தேர்தலைக் காட்டிலும் சுமார் 14 விழுக்காடு குறைவு.

திரு டான் ஜீ சே வழிநடத்திய சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சி போட்டியிட்ட 2 தொகுதிகளில் மொத்தம் 21.5 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

அது எதிர்பார்த்ததைவிடக் குறைந்த வாக்கு விகிதம் என்று கட்சி ஒப்புக்கொண்டது.

சென்ற பொதுத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது சீர்திருத்தக் கட்சி.

முன்னைய தேர்தலை விட, இம்முறை அக்கட்சி போட்டியிட்ட தொகதிகளில் பெற்ற வாக்குகள் சுமார் 11 விழுக்காடு குறைவான வாக்குகளைப் பெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளில் சென்ற பொதுத் தேர்தலைவிட சுமார் 14 விழுக்காட்டு வாக்குகள் குறைவாகப் பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்