Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நாடாளுமன்றத்தில் இடம்பெறப் போகும் ஒரே எதிர்த்தரப்பு: பாட்டாளிக் கட்சி

அடுத்து அமையவிருக்கும் நாடாளுமன்றத்தில் இடம்பெறப் போகும் ஒரே எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சி. 

வாசிப்புநேரம் -

அடுத்து அமையவிருக்கும் நாடாளுமன்றத்தில் இடம்பெறப் போகும் ஒரே எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சி. 

அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் அது பெற்றுள்ள வாக்கு விகிதம் 39.8 விழுக்காடு. 

முன்னைய தேர்தலுடன் ஒப்பிடும்போது அது 6.8 விழுக்காடு குறைவு. 

எல்லாவற்றுக்கும் மேலாக  2013 இடைத் தேர்தலின் போது கைப்பற்றிய பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியையும் இழந்துள்ளது பாட்டாளிக் கட்சி. 

கடைசியாக அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவு அல்ஜூனிட் குழுத்தொகுதிக்கானது. 
இன்று அதிகாலை 3.10மணிக்கு அந்த முடிவு வெளியானது. 

ஹோகாங் விளையாட்டரங்கில் கூடியிருந்தனர் பாட்டாளிக் கட்சியின் ஆதரவாளர்கள். 

ஹோகாங் தனித்தொகுதி கை நழுவிப்போனதில் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றம். 

சற்று நேரத்தில் அல்ஜூனிட் குழுத்தொகுதியைக் கைப்பற்றியதும் பாட்டாளிக் கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம். 

அக்கட்சியின் தலைவர் திரு. லாவ் தியா கியாங் தலைமையிலான ஐவர் குழு வெற்றி கண்டது. 

திரு. இயோ குவாட் குவாங் தலைமையில் புதுமுகங்களை அங்கு களமிறக்கியிருந்தது ஆளும் மக்கள் செயல் கட்சி. 

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது அந்தக் குழு. 
பாட்டாளிக் கட்சியினர் பெற்ற வாக்கு விகிதம் 50.95 விழுக்காடு. 

ஒப்புநோக்க முன்னைய தேர்தலைக் காட்டிலும் அது சுமார் 3 விழுக்காடு குறைவு.

2011 தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு விகிதம் 54 விழுக்காடு. 

தேர்தல் முடிவுகளின் படி, பாட்டாளிக் கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6. 

தேர்தலில் அக்கட்சி பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் தொகுதியில்லா உறுப்பினர்களாக மேலும் மூவரை அக்கட்சி பெறக்கூடும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்