Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரசார ஓய்வு நாள் - நாளை

வாக்களிப்பு தினம் நடைபெறும் செப்டம்பர் 11க்கு முதல் நாளான நாளை, பிரசார ஓய்வு நாள். 

வாசிப்புநேரம் -

வாக்களிப்பு தினம் நடைபெறும் செப்டம்பர் 11க்கு முதல் நாளான நாளை, பிரசார ஓய்வு நாள். 

நாளை பிரசாரங்களுக்கும் தேர்தல் விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை. 

வாக்களிப்பதற்கு முன்னதாகத் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பொதுமக்கள் அலசி ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்கும் வகையில் ஓய்வு நாள் அளிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் துறையின் அறிக்கை தெரிவித்தது. 

எனினும் பிரசார நடவடிக்கைகளுக்கான தடைக்கு சில விதிவிலக்குகள் உண்டு.
வேட்பாளர்கள் பிரசார ஓய்வு நாளன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.

சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள், பணி தொடர்பிலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தடையில்லை.

ஆனால் இவற்றில் பிரசாரமோ தேர்தல் தொடர்பான விளம்பரமோ செய்யக்கூடாது.


பிரசார ஓய்வு நாள்
- முன்வைக்கப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து  பொதுமக்கள் ஆராய்ந்து யோசித்து முடிவெடுத்தல்
- தடைக்கு சில விதிவிலக்குகள் உண்டு
- தகவல்களை வெளியிட தொலைக்காட்சி, வானொலி,  பத்திரிகை ஆகியவற்றுக்குத் தடையில்லை
- பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது
- சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள், பணி தொடர்பிலான  நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தடையில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்