Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்"

ஈஸ்ட் கோஸ்ட்  குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி வேட்பாளர் திரு. ஜெரால்ட் கியாம் தமது கட்சி வெளிநாட்டு ஊழியர்களின் வருகைக்கு எதிரானது இல்லை என்று வலியுறுத்தி இருக்கிறார். 

வாசிப்புநேரம் -

ஈஸ்ட் கோஸ்ட்  குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி வேட்பாளர் திரு. ஜெரால்ட் கியாம் தமது கட்சி வெளிநாட்டு ஊழியர்களின் வருகைக்கு எதிரானது இல்லை என்று வலியுறுத்தி இருக்கிறார். 

மாறாக அவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கும் விரிவான பரிந்துரைகளை முன்வைக்கும்படி அரசாங்கத்தை அக்கட்சிக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு செய்வது வர்த்தகங்கள் எதிர்காலத்தை நன்கு திட்டமிட வாய்ப்பளிக்கும் என்றார் திரு. கியாம்.

வெளிநாட்டு ஊழியர்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியைப் பாட்டாளிக் கட்சி வரவேற்கிறது என்றார் திரு. கியாம்.

கடந்த பத்தாண்டில் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு அளவுக்கு அதிகமாகக் கொண்டுவரப்பட்டனர் என்றும் போதுமான திட்டமிடுதல் அப்போது இல்லை என்றும் திரு. கியாம் குறிப்பிட்டார்.

அதனால்தான் இப்போது அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தெளிவான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்று தங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார் திரு. கியாம்.

தேர்தல், அரசியல் போன்றவற்றின் தாக்கம் ஏதும் இல்லாமல் அது தனிப்பட்ட முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்