Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நீண்ட காலத்தை இலக்காகக் கொண்டது வரவு செலவுத் திட்டம் (வீடியோ)

இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டம் குறுகியகாலத் தீர்வுகளைக் கொண்டது அல்ல, நீண்ட காலத்தை இலக்காகக் கொண்டது என்று நிதியமைச்சர் திரு. ஹெங் சுவீ கியெட்  (Heng Swee Keat) கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தை நிறைவுசெய்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

வாசிப்புநேரம் -
நீண்ட காலத்தை இலக்காகக் கொண்டது வரவு செலவுத் திட்டம் (வீடியோ)

ஆர்ச்சர்ட் ரோட்டின் வண்ண விளக்குகள். (படம்: Reuters)

சிங்கப்பூர்: இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டம் குறுகியகாலத் தீர்வுகளைக் கொண்டது அல்ல, நீண்ட காலத்தை இலக்காகக் கொண்டது என்று நிதியமைச்சர் திரு. ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தை நிறைவுசெய்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

இரு நாட்கள் நீடித்த விவாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் 2016இன் வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வரக்கூடிய அக்கறைகளை உடனுக்குடன் செய்யப்படும் மறுசீரமைப்பின் மூலம் சமாளிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் கவனமாக வரையப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இம்முறை Industry Transformation Programme எனப்படும் தொழில்துறை உருமாற்றத் திட்டத்தின்கீழ் நாலரை பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை நிறுவனங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றினாலும் அது உள்ளபடியே சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்வதற்கானது என்றார் அமைச்சர் திரு. ஹெங்.

பொருத்தமான வேலைகளை உருவாக்கவும், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தவும் அரசாங்கம் முயற்சிகள் எடுக்கும் என்று கூறிய அவர்^ அதே நேரம் நிறுவனங்களும் அவற்றின் பங்கையாற்றவேண்டும் என்றார். வரவு செலவுத் திட்டத்தின் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பரிந்துரைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார் அமைச்சர் திரு. ஹெங்.

சிங்கப்பூர் அடுத்த ஐம்பதாண்டை நோக்கிச் செல்லும் பயணத்தின் ஆரம்பம், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரர்களிடம் உள்ள தொழில்முனைப்பும் பரிவுணர்வும் நிலைத்து நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி திரு. ஹெங் விவாதத்தை நிறைவு செய்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்