Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விமான போக்குவரவுப் பராமரிப்பு: பெரிய முதலீட்டைச் செய்துள்ள சிங்கப்பூர்

சிங்கப்பூர், விமானப் போக்குவரவுப் பராமரிப்பில் மிகப் பெரிய முதலீட்டைச் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், விமானப் போக்குவரவுப் பராமரிப்பில் மிகப் பெரிய முதலீட்டைச் செய்துள்ளது.

வட்டார விமானப் போக்குவரவின் வளர்ச்சிக்குத் தயார் செய்துகொள்ள அந்தப் பணி தொடரும்.

போக்குவரவுத் துறைக்கான மூத்த துணையமைச்சர் திருமதி ஜோஸஃபின் தியோ மன்றத்தில் அதனைத் தெரிவித்தார். 

ஆகாயவெளியில் குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் பறக்கும் விமானங்கள் குறித்த தகவல் சேவையையும் எச்சரிக்கைச் சேவையையும் சிங்கப்பூர் வழங்கி வருகிறது.

அத்தகைய வட்டாரத்தில் பத்தாண்டுக்கு முன்பைவிட சென்ற ஆண்டு, சிங்கப்பூர் 50 விழுக்காடு கூடுதலான விமானங்களைக் கையாண்டது.

2025க்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட விமானங்கள் அதன் வழியாகப் பறந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டம் உள்ளதாகத் திருமதி தியோ கூறினார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அது 380இலிருந்து 600க்கு உயர்த்தப்படும். 

2018இலிருந்து துணைக்கோளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தைக் கண்காணிக்கவும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரவு ஆணையம் எண்ணுகிறது.

விமானப் போக்குவரவு தொடர்பிலான ஆய்வு, மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்த 200 மில்லியன் வெள்ளி முன்னதாக ஒதுக்கப்பட்டிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்