Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

டாக்சி, தனியார் கார்களுக்கான புதிய விதிமுறைகள்

அடுத்த ஆண்டின் முற்பாதியில் டாக்சி, தனியார் கார்களுக்கான புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
டாக்சி, தனியார் கார்களுக்கான புதிய விதிமுறைகள்

Uber சின்னம் (படம்: REUTERS/Lucy Nicholson/Files)

அடுத்த ஆண்டின் முற்பாதியில் டாக்சி, தனியார் கார்களுக்கான புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படவிருக்கின்றன.

Uber, GrabCar போன்ற செயலிகளின் வரவு அதிகரித்துள்ளது. 

டாக்சி துறையில் நியாயமான நடைமுறைகள் தேவை என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

இந்நிலையில் புதிய விதிமுறைகள் குறித்து போக்குவரத்துத் துறைக்கான மூத்த துணையமைச்சர் திரு. இங் சீ மெங் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தனியார் வாடகைக் கார் தொழில்துறை குறித்துக் கடந்த ஆறு மாதங்களாக நடந்த ஆய்வுகளைத் தொடர்ந்து அமைச்சரின் அறிவிப்பு வந்துள்ளது.  

சிங்கப்பூரின் டாக்சி துறையில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.

செயலிகள் மூலம் டாக்சிக்கு முன்பதிவு செய்வது கடந்த 3 ஆண்டுகளில் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் ஆண்டுதோறும் சுமார் மூன்றரை விழுக்காடு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

Uber, GrabCar போன்ற செயலிகளின் வரவு டாக்ஸிகளுக்கான தேவையை மேம்பட்ட வகையில் சமாளிக்க உதவுவதாக அமைச்சர் சொன்னார். 

தனியார் கார் ஓட்டுநர்கள் சுமார் 10,000 பேர் தற்போது சிங்கப்பூரில் உள்ளனர். 

அதனால், உச்ச நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 35 விழுக்காடு கூடியுள்ளது. 

அதன் மூலம் பயணிகள் நன்மையடைந்தாலும் சில சிரமங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டார் அமைச்சர். 

பயணிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய சூழலுக்கு ஏற்ப டாக்சித் துறைக்கு உதவும் வகையிலும் புதிய சட்டக் கட்டமைப்பு அமைந்திருக்க வேண்டும் என்றார் திரு. இங் சீ மெங்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்