Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இலவசக் கார் நிறுத்தங்களின் எண்ணிக்கை குறைந்தது

தற்போது பொதுக் கார் நிறுத்துமிடங்களில் வெகு சில மட்டுமே, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக நிறுத்துவதற்குரிய வசதியை வழங்குகின்றன. 

வாசிப்புநேரம் -
இலவசக் கார் நிறுத்தங்களின் எண்ணிக்கை குறைந்தது

(படம்: Francine Lim))

தற்போது பொதுக் கார் நிறுத்துமிடங்களில் வெகு சில மட்டுமே, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக நிறுத்துவதற்குரிய வசதியை வழங்குகின்றன.

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தகைய இலவசக் கார் நிறுத்தங்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாகக் குறைந்திருப்பதாய்த் திரு. தேசிய வளர்ச்சி அமைச்சிற்கான மூத்த  துணையமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) சொன்னார்.

தற்போது அரசாங்கம் மற்றும் அரசாங்க ஆணைபெற்ற கழகங்களின் கார் நிறுத்தங்களில், சுமார் 55 விழுக்காட்டு நிறுத்தங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசச் சேவை அளிப்பதாகத் திரு. லீ சொன்னார்.

2005-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு வரை அது 70 விழுக்காடாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்தவரை இலவசக் கார் நிறுத்தச் சேவையை வழங்கத் தமது அமைச்சு விரும்புகிறது என்றார் அவர்.

ஆனால் இலவசச் சேவை வழங்குவதா இல்லையா என்பதை அந்த வட்டாரத்தின் குறிப்பிட்ட தேவைகள், கார்நிறுத்துவதற்கான தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் திரு. லீ சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்