Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு குறித்து மறுஆய்வு

போக்குவரத்துப் போலீஸும், நிலப் போக்குவரத்து ஆணையமும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

போக்குவரத்துப் போலீஸும், நிலப் போக்குவரத்து ஆணையமும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவிருக்கின்றன.

அந்த மாற்றங்கள் பின்னொரு தேதியில் அறிவிக்கப்படும் என்றார் உள்துறை அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் திரு. டெஸ்மண்ட் லீ.

நடப்பிலிருக்கும் சட்டத்தின்படி, சரக்கு வாகனங்கள் வேக வரம்பை மீறினால் அது குறித்து எச்சரிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.

அத்தகைய கருவிகள் உள்ள வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

பொதுச் சேவை வாகனங்கள், பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார், பொதுப் பேருந்துகள் ஆகியவற்றுக்கும் சட்டம் பொருந்தும்.

அந்தக் கருவிகள் கனரக வாகனங்களிலும் பொருத்தப்படலாம் என்ற யோசனையை முன்வைத்தார் மன்ற உறுப்பினர் திரு. லூயிஸ் இங். 

அதனைப் பரிசீலிக்கப்போவதாக உள்துறை அமைச்சு சொன்னது.

கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்களை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிலையங்களில் பரிசோதனைக்கு அனுப்புவதும் அவசியம்.

வேக வரம்பை மீறும் கனரக வாகனங்கள் கூடுதல் சோதனைகளுக்குச் செல்ல நேரிடும் என்பதையும் திரு. டெஸ்மண்ட் லீ சுட்டினார்.

கருவிகளை மாற்றியமைக்க முயல்வோருக்கு ஆயிரம் வெள்ளி வரை அபராதமும் மூவாண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்