Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குறைந்த மாணவர் எண்ணிக்கையால் ஒன்றிணையவிருக்கும் பள்ளிகள்

பிடோ நார்த் உயர்நிலைப் பள்ளியும் டமாய் உயர்நிலைப் பள்ளியும் சுமுகமாக இணைவதை உறுதிசெய்ய, கல்வியமைச்சு அவற்றோடு இணைந்து பணியாற்றும்.

வாசிப்புநேரம் -

பிடோ நார்த் உயர்நிலைப் பள்ளியும் டமாய் உயர்நிலைப் பள்ளியும் சுமுகமாக இணைவதை உறுதிசெய்ய, கல்வியமைச்சு அவற்றோடு இணைந்து பணியாற்றும்.

கல்வித் துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி,
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவ்வாறு பதிலளித்தார்.

குறைந்துவரும் மாணவர் எண்ணிக்கை காரணமாக, அடுத்த ஈராண்டுகளில் 22 பள்ளிகள் ஒன்றிணையவிருக்கின்றன.

அவற்றுள், பிடோ நார்த் உயர்நிலைப் பள்ளியும் டமாய் உயர்நிலைப் பள்ளியும் அடங்கும்.

புதிய பள்ளி எங்கிருந்து செயல்படும் என்பது பற்றி முடிவெடுக்கும்போது, போக்குவரத்து வசதி, உள்ளமைப்பு வசதிகளின் தரம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டதாகச் சொன்னார், டாக்டர் ஜனில் புதுச்சேரி.

இறுதியில், டமாய் உயர்நிலைப் பள்ளியின் தற்போதைய இடத்திலிருந்து புதிய பள்ளி செயல்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

புதிதாகக் கட்டப்பட்டுவரும் டௌன் டவுன் இரயில் பாதை, 2 பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கும் சேவை வழங்கும். 

இரண்டு இடங்களுமே, பெரு விரைவு ரயில் நிலையங்களில் இருந்து நடக்கும் தொலைவில் இருக்கும். 

ஆனால், பிடோ நார்த் உயர்நிலைப் பள்ளியைவிட டமாய் உயர்நிலைப் பள்ளிக்கு அதிகமான பேருந்துகள் சேவையாற்றுகின்றன. 

டமாய் உயர்நிலைப் பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

2018 இறுதியில் அந்தப் பணிகள் முடிவடையும்போது, உள்ளரங்கு விளையாட்டுக் கூடம், செயற்கைப் புல்தரை போன்ற நவீன வசதிகள் அங்கிருக்கும் என்பதைச் சுட்டினார், டாக்டர் ஜனில் புதுச்சேரி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்