Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போட்டிகளின் 6ம் நாள்

இன்று காலை நடைபெற்ற குறிசுடும் போட்டியில், சிங்கப்பூர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  

வாசிப்புநேரம் -

இன்று காலை நடைபெற்ற குறிசுடும் போட்டியில், சிங்கப்பூர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்கள், ஐம்பது மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடும் இறுதிப் போட்டியில், Gai Bin, Poh Lip Meng, Lim Swee Hon-ஆகிய மூவர் அடங்கிய குழு, மொத்தம் ஆயிரத்து-632 புள்ளிகளைப் பெற்று வெற்றிகண்டது. அதோடு, மூன்று பேரும், ஒற்றையருக்கான இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளனர்.

இதற்கிடையே, பெண்கள் 25 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடும் இறுதிப் போட்டியில்,  Teo Shun Xie, Nicole Tan, Teh Xiu Hong Tan-ஆகிய மூவர் அடங்கிய சிங்கப்பூர்க் குழு, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. அவர்கள் மூவரும், ஒற்றையருக்கான போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூரின் 23-வயதுக்கு உட்பட்ட Young Lions காற்பந்துக் குழுவினர், அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற, இன்றிரவு Jalan Besar விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், இந்தோனேசியாவைத் தோற்கடிக்கவேண்டும். A-பிரிவில், அந்த இரண்டு குழுக்களுமே ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், கோல் எண்ணிக்கை வித்தியாசத்தில், Young Lions குழு பின்தங்கியிருக்கிறது. அப்படி என்றால், அரை இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூர் தகுதிபெற, இன்றைய ஆட்டத்தில் சமநிலை காண்பது மட்டும் போதாது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்