Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

70-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது சிங்கப்பூர்

சிங்கப்பூர் தனது 70-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. Trap குறிசுடும் போட்டியின் ஆண்கள் பிரிவில் Choo Choon Seng, Lin Hejun, Mohamed Zain Amat ஆகிய மூவர் அடங்கிய குழு, மொத்தம் 343 புள்ளிகளைப் பெற்று தங்கத்தைக் கைப்பற்றியது.

வாசிப்புநேரம் -
70-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது சிங்கப்பூர்

இடதிலிருந்து Mohd Zain Amat, Choo Choon Seng, Lin Hejun ஆகியோர் trap குறிசுடும் போட்டியில் வென்றனர்.

சிங்கப்பூர் தனது 70-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

Trap குறிசுடும் போட்டியின் ஆண்கள் பிரிவில் Choo Choon Seng, Lin Hejun, Mohamed Zain Amat ஆகிய மூவர் அடங்கிய குழு, மொத்தம் 343 புள்ளிகளைப் பெற்று தங்கத்தைக் கைப்பற்றியது.

குறிசுடும் போட்டியில், Li Ya Fei, Cheng Jian Huan, Jasmine Ser-ஆகிய மூவர் அடங்கிய குடியரசின் பெண்கள் குழு, ஐம்பது மீட்டர் நீள் துப்பாக்கிப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

நீர்ச்சறுக்கு விளையாட்டின் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் Sasha Christian தங்கத்தை வென்றார். Bedok நீர்த்தேக்கத்தில் இன்று காலை நடந்த போட்டியில் அவர் 59 புள்ளிகளை எடுத்தார்.

70 தங்கம், 58 வெள்ளி, 75 வெண்கலப் பதக்கங்களை வென்று, மொத்தம் 203 பதக்கங்களுடன் சிங்கப்பூர் தொடர்ந்து பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. தாய்லந்து மொத்தம் 175 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், வியட்னாம் 144 பதக்கங்களுடன் மூன்றாம் நிலையிலும் உள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்