Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

படகோட்டத்தில் சிங்கப்பூருக்கு மேலும் பதக்கங்கள்

ஆண்கள் நால்வர் குழு படகோட்ட லைட்வெயிட் 1000 மீட்டர் பிரிவில் ஸியாஹிர் எசக்கியெல் ரஃபி (Syahir Ezekiel Rafa'ee), லீ ஸொங் ஹான் (Lee Zong Han), பெக் ஹொங் கியட் (Pek Hong Kiat), நஸ்ரி ஹைக்கல் ஹம்ஸா (Nadzrie Hyckell Hamzah), ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:  ஆண்கள் நால்வர் குழு படகோட்ட லைட்வெயிட் 1000 மீட்டர் பிரிவில் ஸியாஹிர் எசக்கியெல் ரஃபி (Syahir Ezekiel Rafa'ee), லீ ஸொங் ஹான் (Lee Zong Han), பெக் ஹொங் கியட் (Pek Hong Kiat), நஸ்ரி ஹைக்கல் ஹம்ஸா (Nadzrie Hyckell Hamzah), ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. மேகமூட்டமான வானிலையிலும் அவர்கள் 3நிமிடங்கள்,  05.25 விநாடிகளில் படகோட்டத்தை முடித்துள்ளனர்.

இந்தோனேசியா 3:02.28 என்ற நேரத்தில் சிங்கப்பூரை விட மூன்று விநாடி வேகமாக முடித்துத் தங்கத்தை வென்றது. வியட்னாம் மூன்று நிமிடங்கள் 06.60 விநாடிகளில் முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.


பெண்கள் ஸகல்லிங் தனிநபர் லைட்வெயிட் 1000 மீட்டர் பிரிவில் சயிடா அய்ஷியாவுக்கு (Saiyidah Aisyah) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

இந்தோனேசியாவின் மர்யாம் மெக்டலினா டைமோய் (Maryam Makdalena Daimoi)மூன்று நிமிடங்கள் 58.93 விநாடிகளில் முடித்து வெள்ளி வென்றுள்ளார்.

தாய்லந்தின் புத்தரக்ஸா நீக்ரி (Phuttharaksa Neegree) மூன்று நிமிடங்கள் 55.27 விநாடிகளில் முடித்து தங்கம் வென்றுள்ளார்.

பெண்கள் இரட்டையர் 1000 மீட்டர் பிரிவில், சிங்கப்பூரைச் சேர்ந்த சான் லய் செங், ஜோன் போ இணையும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 3 நிமிடம், 48.18 விநாடிகள். வியட்நாம் 3 நிமிடம் 41.72விநாடிகள் எடுத்து தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தோனேசியா 3 நிமிடம் 41.79 விநாடிகளில் முடித்து வெள்ளியை வென்றது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்