Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தெ.கி.விளையாட்டுகள்: நிறைவு விழா

பிரமாண்டமாகத் தொடங்கிய 28ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள், அந்தப் பிரமாண்டம் எள்ளளவும் குறையாமல் நிறைவை எட்டியுள்ளன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பிரமாண்டமாகத் தொடங்கிய 28ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள், அந்தப் பிரமாண்டம் எள்ளளவும் குறையாமல் நிறைவை எட்டியுள்ளன. போட்டிகளின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை உள்ளூர் விளையாட்டாளர்களின் சாதனைகளுக்கும் இடமிருந்தது.

விளையாட்டாளர்களின் கடும் உழைப்பை அங்கீகரிக்கும் விதத்தில் தொடங்கின நிறைவு விழாக் காட்சிகள். ஏழரை மணிக்குப் பிறகு அதிபர் டோனி டான் கெங் யாம் விளையாட்டு மையத்திற்கு வருகையளித்தார்.

28ஆவது தென்கிழக்காசியப் போட்களின் வீடியோ தொகுப்புடன் கொண்டாட்டம் சூடுபிடித்தது. சாதனைகளைக் குவித்த விளையாட்டாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே அரங்கினுள் நுழைந்தனர். போட்டிகளைச் சிறப்பாக்க காலநேரம் பார்க்காமல் பணியாற்றிய தொண்டூழியர்களுக்கு நன்றி செலுத்தும் அங்கம் இருந்தது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கிண்ணம் தாய்லந்துக்கு வழங்கப்பட்டது. பின்னர் 28ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள் நிறைவுபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

28ஆவது தென்கிழக்காசியப் போட்டிகளின் கொடி இறக்கப்பட்டு அடுத்த போட்டிகளை ஏற்று நடத்தவிருக்கும் மலேசியாவிடம் அது ஒப்படைக்கப்பட்டது. மலேசியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விண்ணில் கண்ணைப் பறிக்கும் பிரமாண்டமான வாணவேடிக்கைகளைத் தொடர்ந்து பத்து மணிவாக்கில் நிறைவுவிழாக் கொண்டாட்டங்கள் முடிவடையும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்