Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விளையாட்டாளர்களின் திறனை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்

சிங்கப்பூரின் வெற்றிப் பயணம் இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுகளோடு நின்றுவிடக்கூடாது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் வெற்றிப் பயணம் இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுகளோடு நின்றுவிடக்கூடாது.

விளையாட்டாளர்களின் திறனையும், விளையாட்டுத் துறையையும் மேம்படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

சிங்கப்பூர்க் குழுவை வழிநடத்தும் அமைப்பு அவ்வாறு கூறியிருக்கிறது.

விளையாட்டுத் துறையில் சிங்கப்பூர் முத்திரை பதிப்பதற்கு அது நல்ல வழி என்றும் அமைப்பு சொன்னது.

28வது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஜோசப் ஸ்கூலிங்(Joseph Schooling),குவா செங் வென்(Quah Zheng Wen), சாந்தி பெரேரா(Shanti Pereira) உள்ளிட்ட சிங்கப்பூர் வீரர்கள் பதக்கங்களை வென்றதுடன் பல சாதனைகளையும் படைத்தனர்.

போட்டிகளில் இடம்பெற்ற 36 அங்கங்களில்  33இல் சிங்கப்பூர் பதக்கங்களைக் குவித்தது. 25 தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனைகளும் 29 தேசியச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

இது தொடரவேண்டும். அதற்கு வலுவான திட்டத்தை உருவாக்கவேண்டும்.

அத்துடன் அதிகத் தொகையைச் செலவிடவேண்டும் என சிங்கப்பூர்க் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் அமைப்பு எடுத்துரைத்தது.

எல்லா விளையாட்டுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கவேண்டும்.

குறிப்பாக சிங்கப்பூர் வீரர்கள் மிகச் சிறப்பாகச் செய்த நீச்சல் போன்ற விளையாட்டுகளில் கூடுதல் முதலீடு செய்யலாம் என்றும் அமைப்பு கூறியது. 28ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள் முடிவடைந்துள்ளன.

இனி அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைக் கைப்பற்றுவதே^ சிங்கப்பூர் விளையாட்டாளர்களின் இப்போதைய இலக்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்