Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சாதனையை முறியடித்த ஜோசப் ஸ்கூலிங்

 தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்திருக்கிறார் ஜோசப் ஸ்கூலிங்(Joseph Schooling).

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்திருக்கிறார் ஜோசப் ஸ்கூலிங்(Joseph Schooling).

ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் 52.13 விநாடி நேரத்தில் வென்று தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்தார் ஸ்கூலிங்(Schooling). வெள்ளி, வெண்கலம் இரண்டையும் வென்றது இந்தோனேசியா. பெண்கள் 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் குவா டிங் வென்(Quah Ting Wen) வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் எடுத்துக் கொண்ட நேரம் 2 நிமிடம் 14.5 விநாடி. வியட்நாமின் நுவென் தி ஆன் வியென்(NGUYEN Thi Anh Vien) தங்கம் வென்றார்.

அந்தப் புதிய தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை ஏற்படுத்த அவர் எடுத்துக் கொண்ட நேரம் 2 நிமிடம் 11.12 விநாடி.  தாய்லந்துக்கு வெண்கலம்.

திடல்தடப் போட்டிகளின் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் சிங்கப்பூரின் ஷாந்தி பெரேரா(Shanti Pereira). அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.88 விநாடி. 11.76 விநாடியில் வந்து தங்கத்தை வென்றார் பிலிப்பீன்ஸின் ரிச்சர்ட்ஸன் கேலா அனீஸ்(RICHARDSON Kayla Anise)

வெள்ளியை வென்றது தாய்லந்து.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்