Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

படகுப் போட்டி: சிங்கபூருக்கு 2 தங்கங்கள்

இன்று நடைபெற்ற Canoeing போட்டியில் சிங்கப்பூருக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள். அந்த விளையாட்டில் சிங்கப்பூர்க் குழு இதுவரை மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது

வாசிப்புநேரம் -

இன்று நடைபெற்ற Canoeing போட்டியில் சிங்கப்பூருக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்.

அந்த விளையாட்டில் சிங்கப்பூர்க் குழு இதுவரை மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

பெண்கள் ஒற்றையர் K1 200 மீட்டர் போட்டியில் சாரா சென்(Sarah Chen) தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் K1 200 மீட்டர் போட்டியில் மெர்வின் டோ( Mervyn Toh) தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

ஆண்கள் இரட்டையர் K2 200 மீட்டர் பிரிவில் மெர்வின் டோ(Mervyn Toh), முஹம்மது ஷயீனுல் ஐமான் நசிமான்(Muhammad Syaheenul Aiman Nasiman)  இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

பெண்கள் இரட்டையர் K2 200 மீட்டர் பிரிவில் ஸ்டெஃபனீ சென்(Stephanie Chen), சுஸென் சியா(Suzanne Seah) இணை இரண்டாம் நிலையில் வந்தது.

பெண்கள் 50 மீட்டர் குறிசுடும் போட்டியில் சிங்கப்பூருக்கு வெண்கலம்.

ஜெஸ்மின் செர்(Jasmine Ser), லீ யா ஃபெய்(Li Ya Fei), செங் ஜியென் ஹுவான்(Cheng Jian Huan) ஆகிய மூவர் அடங்கிய குழு வெண்கலத்தைப் பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்