Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஓட்டப்பந்தயத்தில் சாதிக்கத் துடிக்கும் இந்திய இளையர்கள்

 28வது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இடம்பெறும் ஓட்டப் பந்தயங்களில் சிங்கப்பூர் இந்திய இளையர்கள் இருவர் முதல்முறையாகக் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

 28வது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இடம்பெறும் ஓட்டப் பந்தயங்களில் சிங்கப்பூர் இந்திய இளையர்கள் இருவர் முதல்முறையாகக் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

முத்திரை பதிக்கத் துடிக்கும் அந்த வீரர்களை காலாங் பயிற்சி வளாகத்தில் சந்தித்து வந்தார், எமது நிருபர் சன்ஜே.

ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரவீன் முத்துக்குமாரும் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முகமது ஷா ஃபிரோசும் போட்டியிடவிருக்கின்றனர்.

அதற்காக கடந்த பல வாரங்களாக நாள்தோறும் பயிற்சி செய்து வருகின்றனர் அவர்கள். மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் வயதில் மூத்தவர், 31 வயது ஃபிரோஸ்.

மனத்தடைகளைத் தகர்த்தெறிவதுதான் தமக்குச் சவாலாக இருப்பதாகச் சொல்கிறார் அவர். ஃபிரோசுக்கும் ரவீனுக்கும் பயிற்சியளித்து வருகிறார் திரு இளங்கோவன் கணேசன். தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 முறை கலந்துகொண்டவர் அவர். தம் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்.

அதனுடன் பல நற்பண்புகளையும் அவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்பதே திரு இளங்கோவனின் விருப்பம்.

வரும் வியாழக்கிழமை மதியம் நாலரை மணிக்குத் தேசிய விளையாட்டரங்கத்தில் ஓடவிருக்கும் 24 வயதான ரவீன் தங்கத்தைத் தட்டிச் செல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறார்.

ஓட்டப்பந்தயங்கள் வரும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கின்றன. அனைத்துப் போட்டிகளைப் பொதுமக்கள் இலவசமாகக் கண்டு ரசிக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்